சுடச்சுட

  

  நாகலாபுரம் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் முத்துசாமிபுரத்தில் நடைபெற்றது.
  முகாமுக்கு கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்தார்.
  நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சுரேஷ்பாண்டி,  மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  பிப்ரவரி 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஏழு நாள்கள் நடைபெற்ற முகாமில் முத்துசாமிபுரம் கிராமத்தில் முழு அளவிலான சுகாதார பணிகள்,  மரக்கன்றுகள் நடுதல், கண்மாய் மற்றும் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாருதல், மருத்துவ முகாம், சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
  நிறைவு விழாவில் பேராசிரியர் சிவக்குமார், எழுத்தாளர் உதயசங்கர், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன், பள்ளி தலைமையாசிரியர் தவமணி, விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்,  மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர்.  பேராசிரியர் விநாயகமூர்த்தி நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai