சுடச்சுட

  

  உடன்குடி ஒன்றிய அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மெஞ்ஞானபுரத்தில் நடைபெற்றது.
  உடன்குடி ஒன்றிய அமமுக செயலர் அம்மன் நாராணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வாக்குச்சாவடி   வாரியாக அமைக்கப்படும் குழுக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலர் பி.ஆர்.மனோகரன்    பங்கேற்று இதற்கான படிவங்களை கிளைக்கழக செயலர்களிடம் வழங்கினார். இதில், மெஞ்ஞானபுரம் ஊராட்சி செயலர் பிரபு, மாவட்ட மகளிரணி தலைவி சொர்ணம், ஒன்றிய அண்ணா தொழிற்சங்க செயலர் முத்துசாமி, கிளைச் செயலர் ராஜ், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு தலைவர் ராமச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai