கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்: 22இல் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கு  பணியிடங்களை நிரப்புவதற்கு நேர்காணல் தூத்துக்குடி மண்டலத்தில் பிப். 22 ஆம் தேதி தொடங்கி வரும் மார்ச் 4 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாள்களில் காலை 9.30 முதல் 5.30 மணி வரை நடைபெறும்.
தூத்துக்குடி புதுக்கிராமத்தில் இயங்கி வரும் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணைஇயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் பங்கேற்பதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், குறிப்பிட்டுள்ள நாளில் விண்ணப்பதாரர்கள் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முக அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
நேர்முக அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வு வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com