தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையம்: ஆட்சியர், எஸ்.பி. ஆய்வு

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர்

மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கிய தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள்,
வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி ஆகியவை வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள், பேரவைத் தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் ஆகியவற்றை ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் வருகை தரும் பகுதி, அலுவலர்கள் வந்து செல்லும் பகுதி, பாதுகாப்பு அறைகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பகுதி உள்பட பல்வேறு இடங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
மேலும், அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்தனர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் மு. வீரப்பன், வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம், தேர்தல்பிரிவு வட்டாட்சியர் நம்பிராயர், தேர்தல்பிரிவு துணை வட்டாட்சியர் முரளி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார், அரசு  அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com