தூத்துக்குடி மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்ததின விழா

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்ததினம் அதிமுக, அமமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71 ஆவது பிறந்ததினம் அதிமுக, அமமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஏற்பாட்டில், கோவில்பட்டியில் பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு நகரச்செயலர் விஜயபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து, இனிப்பு வழங்கினர். 
நகர அதிமுக அலுவலகம் முன்பு படத்துக்கு கட்சியின் மாவட்ட விவசாய அணி இணைச்செயலர் ராமசந்திரன், ஒன்றியச் செயலர் அய்யாத்துரைப்பாண்டியன், பொது கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரத்தினராஜா, துணைத் தலைவர் செண்பகமூர்த்தி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் மகேஷ்குமார், அன்புராஜ், கணேஷ்பாண்டியன், நிலவள வங்கித் தலைவர் ரமேஷ், நிர்வாகிகள் வேலுமணி, பழனிகுமார், ஆ.கணேசன், ஆபிரகாம் அய்யாத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர், அமைச்சர் சார்பில் செண்பகவல்லி அம்மன் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை நகரச் செயலர் விஜயபாண்டியன் தொடங்கி வைத்தார். 
அமமுக: அமமுக சார்பில் தொகுதி பொறுப்பாளர் என்.எல்.எஸ்.செல்வம் தலைமையில் மூக்கரை விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் இனிப்பு வழங்கப்பட்டன. கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலர் சீனிராஜ் முன்னிலை வகித்தார்.
அண்ணா பேருந்து நிலையம் எதிரே ஜெயலலிதா படத்திற்கு கட்சியின் தென்மண்டல பொறுப்பாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா தலைமையில் மாலை அணிவித்தனர்.  அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ரத்ததான முகாமிற்கு நகரச் செயலர் நாகராஜன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் ஈஸ்வரப்பாண்டியன், சீனிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
முகாமை தென்மண்டலப் பொறுப்பாளர் தொடங்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் அருண்குமார், வைகுண்டபாண்டியன், ஏ.கே.முத்து, தங்கப்பாண்டியன், கணபதிபாண்டியன், சங்கர்கணேஷ், ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், பேராட்சி பாலா, கருப்பசாமி, ராம்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
உடன்குடி: உடன்குடியில் அதிமுக  ஒன்றியம், நகரம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலர் த.மகாராஜா தலைமை வகித்தார். நகரச் செயலர் ஜெயக்கண்ணன், மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலர் செல்லத்துரை, துணைச்செயலர் மூர்த்தி, ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் சாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலர் அம்மன் நாராயணன் தலைமை வகித்தார். மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலர் பி.ஆர். மனோகரன் பங்கேற்று, இனிப்பு வழங்கினார்.
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் நகர அதிமுக சார்பில் அரசு ஆதரவற்ற இல்ல மாணவிகளுக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மதியஉணவும், நல உதவிகளும் வழங்கினார். நகர செயலர் காசிராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருப்பாற்கடல், வழக்குறைஞர் அணி துணைச் செயலர் கருப்பசாமி, மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை இணைச்செயலர் காசிராஜன், முன்னாள் தொகுதி இணைச் செயலர் ராஜப்பாவெங்கடாச்சாரி,  எம்.ஜி.ஆர் மன்றத் தலைவர் சுப்பையா, ஒன்றிய பிரதிநிதி வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமமுக சார்பில் மாவட்ட இளைஞர் பாசறை செயலர் புவனேஸ்வரன் தலைமையில் அக்கட்சியினர் ஸ்ரீவைகுண்டம் அரசு ஆதரவற்ற இல்ல மாணவிகளுக்கு காலை உணவு வழங்கினர். மதியம் கள்ளபிரான் சுவாமி பெருமாள் கோயிலில் நகர செயலர் பால்துரை தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேடைப்பிள்ளையார் கோவில் அருகே தென்மண்டல பொறுப்பாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா நல உதவிகளை வழங்கினார். ஒன்றியச் செயலர் முருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலர் சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசுப்பிரமணியன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலர் உதயசூரியன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் மாரிமுத்து, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணித் தலைவர் மாரியப்பன், ஜெ.பேரவை செயலர் மந்திரமூர்த்தி, நகர இளைஞரணி சிவராமலிங்கம்,  கலந்துகொண்டனர்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றிய , நகர அதிமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியச் செயலர் அச்சம்பாடு த. சவுந்திரபாண்டி தலைமை வகித்தார். நகரச் செயலர் என்.எஸ். செல்லத்துரை முன்னிலை வகித்தார். ஒன்றிய துணைச்செயலர் சின்னத்துரை உள்ளிட்டோர் படத்துக்கு மாலையணிவித்து இனிப்பு வழங்கினர்.
சாத்தான்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பொன்முருகேசன், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவபாண்டியன், ஒன்றிய இளைஞரணிச் செயலர் ஐ.டி. பாலகிருஷ்ணன், ஒன்றிய சிறுபான்மை நலப்பிரிவுச் செயலர் அகமது இப்ராஹிம், ஒன்றிய மாணவரணி செயலர் ஸ்டேன்லிஞானபிரகாசம், ஒன்றிய பாசறைச் செயலர் மகாராஜன், ஒன்றிய ஜெயலலிதா பேரவைத் தலைவர் சின்னத்துரை, நகர அவைத் தலைவர் சோமசுந்தரம், நகர ஜெயலலிதா பேரவைச் செயலர் முகமதுசமது, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் ஜெயராணி, ஊராட்சி செயலர்கள் தங்கராஜ், அப்பாத்துரை, கார்த்தீஸ்வரன், ஜெகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அமமுக சார்பில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியச் செயலர்  ரா.திவாகரன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் பொன்பாண்டி, ஒன்றிய துணை செயலர்கள் முருகன், சுரேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலர் தங்கப்பாண்டிஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஜெயலலிதா படத்துக்கு மாவட்ட இளைஞர் பாசறை செயலர் வழக்குரைஞர் புவனேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 
நகரச் செயலர் ஹரிதாஸ், மாவட்ட வர்த்தக அணிச்செயலர் ஆர்.எஸ்.எஸ். ராஜ்மோகன், மாவட்ட பாசறை இணைச் செயலர் வழக்குரைஞர் ஏ.ஆர். இளங்கோ, மாநில எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் பி.கே.ஏ.பி. காசியானந்தம், மாவட்ட மகளிரணி துணைத் தலைவர் பௌலின், ஒன்றிய சிறுபாண்மை பிரிவு செயலர் அப்துல்நிசார், ஒன்றிய எம்ஜிஆர் இளைஞரணி செயலர் ஆர்.கே. கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
தட்டார்மடத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் வி.கே.ஏ.பி .காசியானந்தம்,  கிளைச் செயலர் வேல்முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட  இளைஞர் பாசறை செயலர் வழக்குரைஞர் புவனேஸ்வரன் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.  இதில் ஊராட்சி செயலர்கள், தாமஸ்பாண்டியன், சுயம்பு, ராம்குமார், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com