முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை நிறுவ வலியுறுத்தல்
By DIN | Published On : 28th February 2019 06:11 AM | Last Updated : 28th February 2019 06:11 AM | அ+அ அ- |

விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை நிறுவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலர் தங்கராஜ் தலைமையில், பண்பாட்டுக் கழக உறுப்பினர்கள் கோவில்பட்டியில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜுவை சந்தித்து அளித்த மனு விவரம்: வரி வசூலிக்க வந்த ஆங்கிலேய அதிகாரியை தூக்கிலிட்டுக் கொன்ற தளி-எத்திலப்ப நாயக்கருக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைக்க வேண்டும். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை நிறுவ வேண்டும். தொட்டிய நாயக்கர், ராஜகம்பளம் சமுதாயத்துக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
தொட்டிய நாயக்கர் மற்றும் ராஜகம்பளம் சமுதாயத்தினரின் முன்னேற்றத்திற்காக சமூக நல வாரியம் அல்லது மறுசீரமைப்பு வாரியம் அமைத்து அதை செயல்படுத்த வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.