முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்
By DIN | Published On : 28th February 2019 06:14 AM | Last Updated : 28th February 2019 06:14 AM | அ+அ அ- |

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே உள்ள பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டியையடுத்த முக்கூட்டுமலை அருள்மிகு சிவன் பார்வதி கோயிலில் மகா சிவராத்திரி மற்றும் பங்குனித் திருவிழா தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வந்ததாம். இதையடுத்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்துக்கு, கோட்டாட்சியரும் (பொ), சமூகப் பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியருமான சங்கரநாராயணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், விழா நடத்துவது தொடர்பாக ஒரு மித்த முடிவு எட்டப்பட்டது.