முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
சாத்தான்குளத்தில் நல உதவிகள் அளிப்பு
By DIN | Published On : 28th February 2019 06:11 AM | Last Updated : 28th February 2019 06:11 AM | அ+அ அ- |

சாத்தான்குளத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பயனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் மணிராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து வட்டாட்சியர் ராஜீவ்தாகூர் ஜேக்கப் பேசினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகியன குறித்து தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சுவாமிநாதன் செயல்விளக்கம் அளித்தார்.
முகாமில், மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, 56 பயனாளிகளுக்கு ரூ. 14 லட்சம் மதிப்பில் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மணிமுத்தாறு பாசனத் திட்ட உதவி பொறியாளர் ரமேஷ்குமார், வருவாய் ஆய்வாளர்கள் தங்கசாமி, பிரபு, ராஜேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில்முருகன், சுரேஷ்ராஜா, சண்முகவேல், உஷாதேவி, டாமிசுபலா, முத்துலிங்கம், பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெரோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வட்டாட்சியர் ஞானராஜ் வரவேற்றார். துணை வட்டாட்சியர் ரதிகலா நன்றி கூறினார்.