முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
சாத்தான்குளம் ஒன்றியத்தில் ஊராட்சி சபை கூட்டம்
By DIN | Published On : 28th February 2019 06:17 AM | Last Updated : 28th February 2019 06:17 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் ஒன்றியம் பூச்சிக்காடு, தட்டார்மடம், பன்னம்பாறை, சங்கரன்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு கிராம ஊராட்சி திமுக செயலர்கள் ராஜபாண்டி, முருகேசன், கண்ணன், பாலசிங் ஆகியோர் தலைமை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலர் ஏ.எஸ். ஜோசப் வரவேற்றார்.
கூட்டத்தில் கனிமொழி எம்பி கலந்துகொண்டு கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
பின்னர் அவர் பேசியது: உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் கிராமங்களில் அரசின் நலத் திட்டங்கள், அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
மதுவால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியிலும், மாநிலத்திலும் வரும் மக்களவை தேர்தலோடு ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் அவர்.
இதில், மாநில மாணவரணிச் செயலர் உமரிசங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், மாவட்ட துணைச் செயலர் ஆறுமுகபெருமாள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ. இந்திராகாசி, பசுபதி, மாவட்டப் பிரதிநிதிகள் அலெக்ஸ் புருட்டோ, நயினார், சரவணன், நகரச் செயலர் மகா. இளங்கோ, ஒன்றிய துணைச் செயலர் ஏ. பாலமுருகன், ஒன்றிய இளைஞரணிச் செயலர் ஏ.கார்த்திகேயன், ஒன்றிய மகளிரணிச் செயலர் மேரி ஜெயசித்ரா, மாவட்ட மகளிரணி துணைச் செயலர் சோமசுந்தரி, நகர விவசாய அணி அமைப்பாளர் வியாகப்பன், நகர இளைஞரணிச் செயலர் முருகன், ஊராட்சி செயலர்கள் சித்திரை, கணபதிபாண்டி, ஜான்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.