கோவில்பட்டியில் பாஜக ஆர்ப்பாட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டியில் பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டியில் பாஜகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  சபரிமலை ஐயப்பன் கோயிலில் 50 வயதுக்கு உள்பட்ட 2 பெண்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனர். இதனை கண்டித்தும்,  பக்தர்களின் நம்பிக்கையை சீரழிக்க வேண்டும் என்று தொடர்ந்து செயல்படும் கேரள அரசைக் கண்டித்தும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன், நகரத் தலைவர் வேல்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  கட்சியின் சட்டப் பேரவை அமைப்பாளர் பாலு,  உள்ளாட்சிப் பிரிவு மாவட்டத் தலைவர் பிரபு, பிரசாரப் பிரிவின் மாவட்டத் துணைத் தலைவர் லட்சுமணக்குமார், ஒன்றியத் தலைவர்கள் ஜெயசந்திரன் (ஓட்டப்பிடாரம்), கணபதி (கயத்தாறு) ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில்,  பொதுச் செயலர்கள் தினேஷ்குமார், பாலசுப்பிரமணியன், மாரிமுத்து, குருராஜ், மாவட்ட இளைஞரணித் தலைவர் மாரிசெல்வம், ஓபிசி அணி மாவட்டத் துணைத் தலைவர் நீதிப்பாண்டியன், விவசாய அணி மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com