முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
திருச்செந்தூரில் பேராசிரியையிடம் நகை பறிப்பு
By DIN | Published On : 04th January 2019 12:39 AM | Last Updated : 04th January 2019 12:39 AM | அ+அ அ- |

திருச்செந்தூர், குமாரபுரத்தில் கல்லூரிப் பேராசிரியையிடம் தங்க நகையைப் பறித்துச் சென்றவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
குமாரபுரம், சக்திவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மனைவி திருமகள் (49). இவர் திருச்செந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். புதன்கிழமை மாலை தன் மகளை அருகேயுள்ள பயிற்சி நிலையத்தில் விட்டுவிட்டு, ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது மர்ம நபர் ஒருவர் திருமகளின் 7 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டாராம். திருச்செந்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபரைத் தேடிவருகின்றனர்.