ஆலந்தலை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி
By DIN | Published On : 05th January 2019 01:13 AM | Last Updated : 05th January 2019 01:13 AM | அ+அ அ- |

திருச்செந்தூர் ஆலந்தலையில் இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபியில் புத்தாண்டின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதையொட்டி, பங்கு இல்லத்திற்கு வருகை தந்த தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸுக்கு வரவேற்பு அளித்து கெபிக்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு நவநாள் வழிபாட்டுக்கு ஆயர் தலைமை வகித்து மறையுரை ஆற்றினார்.
அப்போது, சிறப்பு வழிபாடு, நோயாளிகளுக்கான சிறப்பு ஜெபம் ஆகியவை நடைபெற்றன. இதில், வட்டார முதன்மை குரு சகாயம், பங்குதந்தைகள் அடைக்கலாபுரம் செட்ரிக்பிரீஸ், மணவை அருமைதாஸ், தூத்துக்குடி லூசன், சதீஸ், கிராசியூஸ், வள்ளியூர் ஜஸ்டின், செட்டிவிளை ததேயூஸ், ஏரல் ஜான்சன், நாகலாபுரம் ராஜேஸ், குலசை பங்கிராஸ், ஆலய பங்குதந்தை ஜெயக்குமார், துணை பங்குதந்தை ரோஷன் மற்றும் சென்னை, கோவை, திருச்சி, பெங்களூரு, புதுச்சேரி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பின்னர், அசன உணவு வழங்கப்பட்டது.