செட்டியாபத்தில் 5000 பேருக்கு அன்னதானம்
By DIN | Published On : 05th January 2019 01:17 AM | Last Updated : 05th January 2019 01:17 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட பம்புசெட் விவசாய சங்கத் தலைவர் பொன். இராமநாத ஆதித்தனின் 77வது பிறந்த தினத்தையொட்டி 5000 பேருக்கு வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.
செட்டியாபத்து பி.ஆர். நினைவகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, உடன்குடி ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் கா.ஜெயக்குமார்,ஒன்றிய அமைப்புச்செயலர் அழகேசன், பொதுச்செயலர் சிவந்திவேல், ஒன்றிய உள்ளாட்சிப் பிரிவு தலைவர் சின்னத்துரை, நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதையொட்டி, 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாஜக மாவட்டத் தலைவர் இரா.சிவமுருகன் ஆதித்தன், பபிதா ஆதித்தன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
பாஜக மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் லங்காபதி,கோட்டப் பொறுப்பாளர் ராஜா, மாவட்டத் தலைவர் ம.பாலாஜி, சார்பு அணித் தலைவர்கள் பாலசுப்பிரமணிய ஆதித்தன், செல்வகண்பதி, முத்துராஜன் தர்மலிங்கம், தங்கபாண்டியன், பரமசிவன் மற்றும் திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் கிருஷ்ணகுமார், நகரத் தலைவர் சரவணன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கு.நெல்லையம்மாள், மாவட்ட விவசாயப் பிரிவுச் செயலர் செந்தூர்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.