தூத்துக்குடியில் என்எஸ்எஸ் முகாம்

தூத்துக்குடி அருகே சில்வர்புரம் மற்றும் சுப்பிரமணியபுரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி அருகே சில்வர்புரம் மற்றும் சுப்பிரமணியபுரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் (அணி எண்கள்: 54 மற்றும் 56) சார்பில், 7 நாள் சிறப்பு முகாம் தூத்துக்குடி அருகேயுள்ள சில்வர்புரம் மற்றும் சுப்பிரமணியபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழா சில்வர்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, காமராஜ் கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் கு. காசிராஜன், லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்ல இயக்குநர் கிராசிஸ் மைக்கல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமை மாநகரக் காவல் துணைக் கண்காணிப்பார் ஆர். பிரகாஷ் தொடங்கிவைத்தார்.
 முகாமில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் 100 பேர் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியில், இரு பகுதிகளையும் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முகாமுக்கான ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆ. தேவராஜ், பா. பொன்னுத்தாய் ஆகியோர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com