Enable Javscript for better performance
"ஹலோ போலீஸ்' திட்டம் மூலம் 698 அழைப்புகள் மீது நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    "ஹலோ போலீஸ்' திட்டம் மூலம் 698 அழைப்புகள் மீது நடவடிக்கை

    By DIN  |   Published on : 08th January 2019 07:40 AM  |   அ+அ அ-   |    |  

    தூத்துக்குடி மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹலோ போலீஸ் திட்டம் மூலம் இதுவரை 697 அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு உடனடியாக உதவிடவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் "ஹலோ போலீஸ்" என்ற திட்டம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதி தொடங்கப்ட்டது. கடந்த 31 ஆம் தேதி வரை 698 அழைப்புகள் வந்து உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
    இதுவரை செல்லிடப்பேசி மூலம் 594, கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் 98 மற்றும் குறுஞ்செய்தி மூலம் 6 என மொத்தம் 698 அழைப்புகள் வந்துள்ளன. இதில், 174 அடி, தடி தகராறுகள்,  மணல் கடத்தல் குறித்து 71, சட்ட விரோதமான செயல்கள் குறித்து 69, நிலத்தகராறு சம்பந்தமாக 51, சாலை போக்குவரத்து குறித்து 43, குடும்பத்தகராறு குறித்து 42, மோசடி குறித்து 26, மிரட்டல்  சம்பந்தமாக 24,  களவு சம்பந்தமாக 20 மற்றும் ஆவணம் தொலைந்தது,  பெண்கள் வன் கொடுமை, மனநோயாளி, காணாமல் போனவர்கள், தீ விபத்து, குழந்தை திருமணம் மற்றும் இதர தகவல்கள் குறித்த அழைப்புகள் 178 ஆகும். இந்த அழைப்புகள் அனைத்துக்கும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது.  பெரும்பாலான தகவல்கள் காவல்துறைக்கு பயனுள்ளதாக இருந்தது.
     எனவே,  சட்டவிரோதமான செயல்கள் குறித்து பொது மக்கள் தங்களுக்கு தெரிய வரும் தகவல்களை 95141 44100 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு நேரடியாகவோ அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp