சுடச்சுட

  

  கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.  
  கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றிய ஆணையர் கிரி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.  
  கயத்தாறு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் முருகானந்தம் தலைமையில், வட்டாட்சியர் லிங்கராஜ் விழாவை தொடங்கிவைத்தார். துணை வட்டாட்சியர்கள் மணிகண்டன், திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் செல்வராஜ் விழாவை தொடங்கிவைத்தார்.  சாத்தூர் ஊராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சீனிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.  
  கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் செ.ராஜு குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்துப் பேசினார்.  
  வணிக வைசிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளிச் செயலர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். வணிக வைசிய சங்கத் தலைவர் பூவலிங்கம் முன்னிலை வகித்தார்.  அமைச்சர் கடம்பூர் செ.ராஜு விழாவை தொடங்கிவைத்துப் பேசினார்.  
  ஸ்ரீகரா சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயல் இயக்குநர் டென்சிங் பால்ராஜன், நிர்வாக இயக்குநர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் சியாமளா விழாவை தொடங்கிவைத்தார்.  
  ஈராச்சி பரிமேலழகர் இந்து நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளிச் செயலர் தங்கமாரியப்பன் தலைமை வகித்தார். 
  பொங்கல் விழாவையொட்டி, பள்ளி, கல்லூரிகளில் மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai