சுடச்சுட

  

  சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 12th January 2019 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொங்கல் திருநாளை முன்னிட்டு சேவல் சண்டைக்கு அரசு அனுமதி வழங்கக் கோரி, பாரதிய கிசான் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
  கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். 
  நாட்டுக்கோழி இனங்களைப் பாதுகாக்க அரசும், அமைப்புகளும் முன்வர வேண்டும். கலாசார நிகழ்வான நாட்டுக்கோழி, சேவல் சண்டைக்கு அரசு அனுமதிதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோட்டாட்சியர் அலுவலகம் முன் சேவலுடன் திரண்டு வந்து அவர்கள், கோஷமிட்டனர். இதில், மாவட்டச் செயலர் பரமேஸ்வரன், இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலர் லட்சுமிகாந்தன், கிசான் சங்க ஒன்றியத் தலைவர் ஜெயராமன், ஒன்றியச் செயலர் கிருஷ்ணசாமி, இளையரசனேந்தல் குறுவட்ட உரிமை மீட்புக் குழுத் தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai