சுடச்சுட

  

  தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது.
  வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. ராமூர்த்தி தலைமை வகித்தார். இதில், வங்கியின் துணைத் தலைவர், வங்கியின் பொதுமேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
  தூத்துக்குடியில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் நடைபெற்ற விழாவுக்கு, அகாதெமியின் நிறுவனர் து. சுகேஷ் சாமுவேல் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், வங்கி பணிக்கான ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் மாணவர், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில்  நடைபெற்ற பொங்கல் விழாவில், கோலப்போட்டி, பொங்கலிடுதல், உறியடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, விவசாயிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் கல்லூரிச் செயலர் சுப்புலட்சுமி தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் பயிற்சி கல்லூரியிலும் பொங்கல் விழா நடைபெற்றது.

  நாகலாபுரம் அரசு கல்லூரியில்...
  நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற  பொங்கல் விழாவுக்கு,  கல்லூரி முதல்வர் ஜெ. ஜெயசிங் தலைமை வகித்தார். பேராசிரியர் மகேஷ் முன்னிலை வகித்தார். புது பானையில் பொங்கலிடப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.

  புதுக்குளம் பள்ளியில்...
  சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா நடைபெற்றது. 
  பள்ளித் தலைமை ஆசிரியர் மரியஜான் பிரிட்டோ தலைமை வகித்தார். ஆசிரியர் ராபர்ட்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாணவர், மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
  மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் பொங்கலிட்டனர். பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியர் ஏனோக் பிரபு நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai