Enable Javscript for better performance
விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா- Dinamani

சுடச்சுட

    

    விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா

    By DIN  |   Published on : 12th January 2019 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில், 5ஆவது ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஸ்ரீஅம்பாள் வித்யாலயா கல்வி அறக்கட்டளை ஆலோசகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜீ.வி. மார்க்கண்டேயன் தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் எஸ்.கே. சுப்பாரெட்டியார் முன்னிலை வகித்தார். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி, யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
    விழாவில் பள்ளி நிர்வாக அலுவலர் நரசிம்மராஜ், பள்ளி முதல்வர் ஜெயகாந்தன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்சாமி, பள்ளி உடற்கல்வி இயக்குநர்கள் சிவபால குமரன், காயத்ரி, வையணன், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஆர். மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai