சுடச்சுட

    

    விளாத்திகுளம் ஒன்றியத்தில் திமுக கிராம சபைக் கூட்டம்

    By DIN  |   Published on : 12th January 2019 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் ஒன்றியத்தில் திமுக சார்பில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதா ஜீவன் தலைமையில், வில்வமரத்துப்பட்டி, கே. சுந்தரேஸ்வரபுரம், அயன் கரிசல்குளம், அயன் பொம்மையாபுரம், கோடங்கிபட்டி, குருவார்பட்டி ஆகிய கிராமங்களில் இக் கூட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் வசந்தம் ஜெயகுமார், விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருபர ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசுவாமி, நாமக்கல் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
    நிகழ்ச்சியில், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், நகரச் செயலர் வேலுசாமி, ஒன்றியச் செயலர்கள் சின்ன மாரிமுத்து, ராதாகிருஷ்ணன், செல்வராஜ், நவநீதகண்ணன், மாவட்டப் பிரதிநிதி அன்புராஜன், புதுராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai