2021 வரை நீடித்து மீண்டும் ஆட்சி அமைப்போம்

அதிமுக 2021 வரை ஆட்சியில் நீடிக்கும் என்பதோடு, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு. 

அதிமுக 2021 வரை ஆட்சியில் நீடிக்கும் என்பதோடு, மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு. 
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கயத்தாறு ஒன்றியங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றப் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஆரோக்கியமான ஆட்சி உள்ளதா, இல்லையா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும். தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சான்றிதழ் கொடுக்கத் தேவையில்லை. தமிழகத்தில் 50 ஆண்டுகாலமாக திராவிட பாரம்பரிய ஆட்சி நடைபெறுகிறது. அதில், 29 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆரோக்கியமான ஆட்சி தருவதால்தான் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். அதிமுக தனிப் பெரும்பான்மையோடு இருக்கும் கட்சி. அதிக வாக்குவங்கி கொண்டிருக்கும் இயக்கம் இது.  இதை தமிழிசை செளந்தரராஜன் தெரிந்துகொள்ள வேண்டும். 
இடைத்தேர்தல் வந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று வைகோ கூறியது குறித்து கேட்கிறீர்கள். அவரைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அதிமுக ஆட்சி 2021 வரை நீடிப்பதோடு, மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். 
கோவில்பட்டியில் ரூ. 7 கோடியில் நடைபெறவுள்ள சாலை விரிவாக்கப் பணியில், லட்சுமி மில் மேம்பாலம் முதல் லாயல் மில் மேம்பாலம் வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கப் பணி நடைபெறவுள்ளது. இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள், மின்கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றுவதால் பணிகளை தொடங்க காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, இந்தப் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. சாலை விரிவாக்கப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com