சுடச்சுட

  


  தூத்துக்குடியில் நடைபெற்ற கலைப் போட்டிகளில் மதிதா இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பிடித்தது.
  தூத்துக்குடி காமராஜ் கல்லூரி சார்பில், பொங்கலோவியம்-2019 என்ற தலைப்பில், கல்லூரிகளுக்கு இடையேயான கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
  போட்டியை சுபத்ரா வெற்றிவேல் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
  தொடக்க நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலர் ராஜேந்திரன், முதல்வர் து. நாகராஜன், முதன்மையர் சக்திவேல், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் டோனி மெல்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  தனி நடனம், குழு நடனம், தனி நடிப்பு, நாடகம், பாட்டுப் போட்டி என பல்வேறு கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
  போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்த திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி அணிக்கு கல்லூரி முதல்வர் (பொ) காசிராஜன் பரிசுகளை வழங்கினார்.
  ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் வான்மதி, மேரி ஜோசப்பின் செரினா, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் ஆகியோர் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai