சுடச்சுட

  


  கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, நகராட்சி ஆணையர் அச்சையா தலைமை வகித்தார். நகராட்சி அலுவலக மேலாளர் முத்துச்செல்வம், நகரமைப்பு அலுவலர் காஜாமுகைதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
  கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலர் கண்ணன் விழாவை தொடங்கிவைத்துப் பேசினார். 
  கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரிச் செயலர் செல்வராஜ் தலைமை வகித்து, விழாவை தொடங்கிவைத்தார். பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கல்லூரி முதல்வர் கிருஷ்ணசாமி பொங்கலின் முக்கியத்துவம் குறித்து பேசினார். 
  கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிச் செயலர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். பொருளாளர் ரத்தினராஜா, பள்ளி முதல்வர் தேன்மொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
  ஸ்ரீ கண்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தாளாளர் சம்பத்கண்ணன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மனோகரன் முன்னிலை வகித்தார். 
  நாடார் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளிச் செயலர் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் செல்வி, பத்திரகாளியம்மன் கோயில் மாதர் சங்கத் தலைவி ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்கத் தலைவர் ஆசியா ஃபார்ம்ஸ் பாபு விழாவை தொடங்கிவைத்துப் பேசினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai