Enable Javscript for better performance
சந்தையடியூர் நாராயண சுவாமி கோயிலில் பால்முறைத் திருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சந்தையடியூர் நாராயண சுவாமி கோயிலில் பால்முறைத் திருவிழா தொடக்கம்

    By DIN  |   Published on : 13th January 2019 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    உடன்குடி சந்தையடியூர் நாராயண சுவாமி கோயிலில், தை மாத பால்முறைத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.
    இதையொட்டி அய்யா அன்று இரவு 10 மணிக்கு அன்ன வாகனத்திலும், சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாக வாகனத்திலும் முக்கிய வீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து விழா நாள்களில் கருடர், குதிரை, அனுமார், பூஞ்சப்பரங்களில் அய்யா பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, தர்மம் எடுத்தல், சந்தனக்குடம் எடுத்தல், உம்பான் தர்மம் வழங்கல், விளக்கு வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai