சுடச்சுட

  


  திருச்செந்தூரில் இந்து முன்னணி சார்பில் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
  மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் விவேகானந்தர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 
  நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.செந்தில்வேல், தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாவட்டத் தலைவர் இரா.கிருஷ்ணன், இந்து முன்னணி நகர பொதுச் செயலர் எம்.முத்துராஜ், நகர துணைத் தலைவர்கள் மாயாண்டி, பட்டு, நகரப் பொருளாளர் ஆர்.மணி, வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  தூத்துக்குடி, ஜன. 12: விவேகானந்தா கேந்திரம் தூத்துக்குடி கிளை மற்றும் காமராஜ் கல்லூரி ஆகியன சார்பில், சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. 
  இதையொட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விவேகானந்தர் வேடமணிந்த மாணவர், மாணவிகள் பாடல்கள் பாடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
  தொடர்ந்து அம்மாணவர், மாணவிகள் மேடையில் விவேகானந்தரின் பொன் மொழிகள் மற்றும் அவருடைய பேச்சுகளை பேசி நடித்தனர்.
  நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் து. நாகராஜன், முதன்மையர் சக்திவேல், விவேகானந்தா கேந்திரம் தூத்துக்குடி கிளைத் தலைவர் சுபத்ரா வெற்றிவேல், துணைத் தலைவர் கெளரி, உறுப்பினர்கள் மதனகோபால், முனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  விழாவை முன்னிட்டு மாணவர், மாணவிகளுக்கு மாறுவேட போட்டி, விநாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai