சுடச்சுட

  


  தூத்துக்குடி சண்முகபுரம் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயிலில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, உலக அமைதி, மழைவளம், தொழில்வளம் உள்ளிட்டவை வேண்டி, 351 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
  இதையொட்டி பஜனை பாடலுடன், பத்திரகாளி, மாரியம்மாள், உச்சிமகாளி அம்மனுக்கு அலங்காரத்துடன் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பூசாரி ஆறுமுகசாமி செய்திருந்தார். திருவிளக்கு பூஜையில் மகளிர் அணியினர், கோயில் நிர்வாகிகள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai