சுடச்சுட

  

  தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழக தலைவர் பொறுப்பேற்பு

  By DIN  |   Published on : 13th January 2019 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவராக தா.கி. ராமச்சந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
  தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த தா.கி. ராமச்சந்திரன், தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தூத்துக்குடி துறைமுக அலுவலகத்தில் சனிக்கிழமை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
  புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள தா.கி. ராமச்சந்திரன் 1991ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பிரிவு (தமிழ்நாடு) அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர். 
  ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் ஆட்சியராகவும், தமிழக நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்களின் செயலராகவும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறையின் முக்கிய செயலராகவும், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் துறையின் நிர்வாக இயக்குநராகவும், 
  தமிழ்நாடு பயிற்சி துறையின் பொது இயக்குநராகவும், ஆவின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai