தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குப் பெட்டக தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்

தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குப் பெட்டக லேசிங் தொழிலாளர்கள் மற்றும் பிரைம்மூவர் ஓட்டுநர்கள் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்குப் பெட்டக லேசிங் தொழிலாளர்கள் மற்றும் பிரைம்மூவர் ஓட்டுநர்கள் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் உள்ள பிஎஸ்ஏ சிகால் சரக்குப் பெட்டக லேசிங் தொழிலாளர்கள் மற்றும் பிரைம்மூவர் ஓட்டுநர்கள் தங்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் பாதிக்காத வகையில் ஊதிய குறைப்பும், வேலை நாள்கள் குறைப்பும் இல்லாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்நிலையில், சரக்குப் பெட்டகத்தில் பணிபுரியும் 98 பேருக்கு வெள்ளிக்கிழமை துறைமுக நுழைவுச் சீட்டு நீட்டிப்பு வழங்காததால் அவர்கள் தொடர்ந்து பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும் காத்திருக்கும் போராட்டத்தை தொடங்கினர். இரண்டாவது நாளாக சனிக்கிழமை போராட்டம் தொடர்ந்ததையடுத்து, பிஎஸ்ஏ சிகால் சரக்குப் பெட்டக நிறுவன உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 
நுழைவுச் சீட்டு அனுமதி 10 நாள்களுக்கு நீட்டித்து வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com