மாநில ஹாக்கி: கோவில்பட்டி பாலிடெக்னிக் அணி முதலிடம்

மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பிடித்தது. 


மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதலிடம் பிடித்தது. 
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டு நாள்கள் நடைபெற்றது. 
இதில், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி அணி பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் அணியை 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது. 
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் சிவராஜ், பயிற்சியாளர் சிவனேசன் ஆகியோரை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com