சாத்தான்குளம் நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம்
By DIN | Published On : 29th January 2019 01:36 AM | Last Updated : 29th January 2019 01:36 AM | அ+அ அ- |

சாத்தான்குளம் அரசு கிளை நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் ஓ.சு.நடராசன் தலைமை வகித்து, கொடியேற்றி வைத்தார். மருந்தாளுநர் பாப்புராஜ், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன், பாரதி இலக்கிய மன்ற அமைப்பாளர் ஈஸ்வர் சுப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் ஜாண் லூயிஸ் வரவேற்றார். நூலக பெரும்புலவராக இணைந்த எழுவரைமுக்கி கிராம நிர்வாக அலுவலர் சிவகாமி சரவணவேல் மற்றும் நூலகத்துக்கு நாற்காலி அன்பளிப்பாக வழங்கிய மங்கையர்க்கரசி முத்துக்குமார் ஆகியோர் கெளரவிக்கப்பட்டனர். யோகா ஆசிரியை ராஜலட்சுமி, சங்கரநாராயணன், வர்த்தக சங்க பொருளாளர் பாபு சுல்தான் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நூலகர் சித்திரைலிங்கம் நன்றி கூறினார்.