பாடப் புத்தகத்தில் அய்யா வழி குறித்து தவறான கருத்துகளை நீக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 01st July 2019 07:41 AM | Last Updated : 01st July 2019 07:41 AM | அ+அ அ- |

தமிழக அரசின் புதிய பாடநூல்களில் அய்யா வழி குறித்து தவறான தகவல்கள் இருப்பதை நீக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட அய்யா வழி அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட அய்யா வழி அறக்கட்டளை தலைவர் என். ஜெயக்குமார், நிர்வாகிகள் முதல்வர்,துணை முதல்வர், கல்வி அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு மனு அனுப்பியுள்ளனர்.