ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 01st July 2019 07:40 AM | Last Updated : 01st July 2019 07:40 AM | அ+அ அ- |

ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி கடைகளில் பயன்படுத்தப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், இளநிலை உதவியாளர் தமிழ்ராசி உள்ளிட்ட பேரூராட்சிப் பணியாளர்கள் அப்பகுதியிலுள்ள கடைகள், ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.ஆழ்வார்திருநகரியில் நடைபெற்ற ஆய்வின்போது, கடைகள், உணவகங்களில் சுமார் 5 கிலோ நெகிழிப் பொருள்களை பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் தலைமையில் பணியாளர்கள் பறிமுதல் செய்தனர்.