சுடச்சுட

  

  கோவில்பட்டியில் திங்கள்கிழமை இரவு சர்க்கஸ் தொடங்கியது. 
  கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள யானைக் கிணறு மைதானத்தில் பிரம்மாண்ட கலையரங்கில் அப்பல்லோ சர்க்கஸ் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர் ராஜு தலைமை வகித்தார். அனைத்துலக அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனர் சங்கரலிங்கம் சர்க்கஸை தொடங்கி வைத்தார்.  
  நிகழ்ச்சியில்,    கயிற்றில் தொங்கியபடி விளையாடுதல், வலை விளையாட்டு, நெருப்பு விளையாட்டு, உடலை வில்லாக வளைத்தல் உள்பட பல்வேறு சாகச   நிகழ்ச்சிகளை  100 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் செய்து காண்பித்தனர்.  தினமும்,  பிற்பகல்  1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3  காட்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை அப்பல்லோ சர்க்கஸ் மேலாளர் சனில் செய்திருந்தார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai