முன்னாள் ராணுவ வீரர்களின் குறைதீர் கூட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இக்கூட்டத்துக்கு,  கோட்டாட்சியர் விஜயா தலைமை வகித்தார்.
கூட்டத்தில், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சூரியகலா, துணை வட்டாட்சியர்கள் நிஷாந்தினி (விளாத்திகுளம்),  சுபா (எட்டயபுரம்),  மாடசாமி (கயத்தாறு),  வட்ட வழங்கல் அதிகாரிகள் அய்யப்பன் (கயத்தாறு), வேலம்மாள் (கோவில்பட்டி), முன்னாள் ராணுவ சங்கத்தின் தலைவரும், அகில இந்திய முன்னாள் ராணுவத்தின் துணைப் பொதுசெயலருமான கேசவன்ராஜன்,  கோவில்பட்டி முன்னாள் ராணுவவீரர்கள் சங்கச் செயலர் ராமச்சந்திரன்,  நிர்வாகக் குழு உறுப்பினர் ஜெயபால், தூத்துக்குடி முன்னாள் ராணுவவீரர்கள் மைய நல உதவி அமைப்பாளர் செரீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
கூட்டத்தில், கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் வட்டத்துக்குள்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் 29  பேர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com