திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பக்தர்களை அச்சுறுத்தும் நாய்கள்
By DIN | Published On : 05th July 2019 01:10 AM | Last Updated : 05th July 2019 01:10 AM | அ+அ அ- |

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அழகிய கடலோரம் தனிச்சிறப்புடன அமைந்துள்ளது.
இதனாலே இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியை வழிபட்டதுடன், அலை வீசும் கடலழகை கரையோரத்திலும், திருக்கோயில் சுற்றுப்பாதையிலும் இருந்து ரசிப்பது வழக்கமாகும். இதனால் திருக்கோயில் வளாகமே எப்போதுமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.நாய்களால்தொல்லை:
தற்போது திருக்கோயில் வளாகத்தில் அதிகளவிலான ஆடு, மாடுகள் மட்டுமன்றி நாய்களும் சுற்றித்திரிந்து வருகின்றன. அவற்றில் ஆடு, மாடுகள் பக்தர்களின் உணவுப்பொருள்கள், தலையில் வைத்திருக்கும் பூக்களை அவ்வப்போது இழுத்து தின்கின்றன. அதே போல, கூட்டமாக திரியும் நாய்கள் பக்தர்களை அவ்வப்போது குரைப்பதும், துரத்துவதுமாக அச்சுறுத்தி வருகின்றன. இதனால் பக்தர்கள் நாய்களை கண்டாலே அச்சமடைந்து வருகின்றனர்.
எனவே திருக்கோயில் நிர்வாகம் கோயில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்களையும், கால்நடைகளையும் கட்டுப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.