"திருநெல்வேலி-சாத்தான்குளத்துக்கு கலுங்குவிளை வழியாக பேருந்து வசதி தேவை'
By DIN | Published On : 05th July 2019 12:56 AM | Last Updated : 05th July 2019 12:56 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் இருந்து கலுங்குவிளை வழியாக இயக்கப்பட்ட அரசுப் பேருந்து, ஓராண்டாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் கிராமமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து முனைஞ்சிப்பட்டி, மேலசெட்டிக்குளம், கலுங்குவிளை, நெடுங்குளம், அமுதுண்ணாக்குடி வழியாக சாத்தான்குளத்துக்கு அர ப் பேருந்து (எண் 134-65) இயக்கப்பட்டு வந்தது. இந்தப் பேருந்தானது காலை ஒரு முறையும், மாலை ஒருமுறையும் இயக்கப்பட்டது. இதனால் கிராமமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் எந்த முன்னறிவிப்பு இன்றி பேருந்து திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் கிராம மக்களும் மாணவ,மாணவிகளும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, போக்குவரத்து கழக அதிகாரிகள் கிராமபுற மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி நிறுத்தப்பட்டுள்ள அரசுப் பேருந்தை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.