சுடச்சுட

  

  திருச்செந்தூர் கோயில் உண்டியல் காணிக்கை: ரூ. 81 லட்சம் வசூல்

  By DIN  |   Published on : 11th July 2019 09:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை மாதத்தில் முதல் தடவை எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில் ரூ. 81 லட்சம் வசூலானது.
  இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் இரு முறை எண்ணப்படுகிறது. அதன்படி ஜூலை மாதத்திற்கான முதல் தடவை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
  கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை தலைமை வகித்தார். இப்பணியில், உதவி ஆணையர்கள் தூத்துக்குடி சு.ரோஜாலி சுமதா, திருச்செந்தூர் வே.செல்வராஜ், அறநிலையத் துறை ஆய்வாளர் மு.முருகன், தக்கார் பிரதிநிதி ஆ.சி. பாலசுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்கள் சார்பில் சு.வேலாண்டி,  இரா.மோகன், ச.கருப்பன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப்பணிக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
  கோயில் நிரந்தர உண்டியல்களில் ரூ. 81லட்சத்து 3 ஆயிரத்து 858-ம் தங்கம் 805 கிராம், வெள்ளி 11,650 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்ஸிகள் 340 ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai