சுடச்சுட

    

    திருச்செந்தூர் விநாயகர் கோயிலில்... 
    திருச்செந்தூர் ஸ்ரீசபாபதி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
    இதைமுன்னிட்டு காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு,  கணபதி ஹோமம், தாராபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கும்ப பூஜை,  பூர்ணாஹுதி தீபாராதனை, விமான கலசத்துக்கு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. 
     முன்னதாக சிறுவர், சிறுமிகள் பால்குடம் எடுத்து வீதிவலம் வந்தனர். மதியம் அன்னதானம் நடைபெற்றது. இரவில் விநாயகர், மூஷிக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    ஆத்தூர் சித்தி விநாயகர் கோயிலில்...
    ஆத்தூர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
    இதையொட்டி, காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மஹாலட்சுமி ஹோமம், ருத்ர ஜெபம் ஆகியவை நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு விமான அபிஷேகமும்,  தொடர்ந்து மூலவருக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றன. பிற்பகல் 1.30 மணிக்கு உச்சிகால தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 
    ஏற்பாடுகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


    சாத்தான்குளம் அழகம்மன் கோயிலில்...
    சாத்தான்குளம் தேவி ஸ்ரீஅழகம்மன் கோயிலில்  வருஷாபிஷேகம் நடைபெற்றது. 
    இதை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. 
    மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி, இரவில் அம்மன் சப்பர வீதியுலா ஆகியவை நடைபெற்றன.


    காலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோயிலில்...
    உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
     இதையொட்டி காலை 5 மணிக்கு பால விநாயகர் கோயிலில் யாகசாலை பூஜைகள், கும்பம் எழுந்தருளல்,  விமான அபிஷேகம்,  7 மணிக்கு முத்தாரம்மன் கோயிலில் யாகசாலை பூஜைகள், விமான அபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.  நண்பகல் 12 மணிக்கு மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடைபெற்றது. 
    மாலை 6 மணிக்கு 108   திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 
    ஏற்பாடுகளை விழாக் குழுத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் சற்குணம், செயலர் செல்வன், துணைச் செயலர் கணேசன், பொருளாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai