முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா

முக்காணி அருள்மிகு ஆதிபரமேஸ்வரி அம்மன் கோயில் கொடைவிழா 3 நாள்கள் நடைபெற்றது.

முக்காணி அருள்மிகு ஆதிபரமேஸ்வரி அம்மன் கோயில் கொடைவிழா 3 நாள்கள் நடைபெற்றது.
தொடக்க நாளான திங்கள்கிழமை காலை 5 மணிக்கு  மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு வேத பாராயணம், மூலமந்திர ஹோமம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு புனிதநீர் மற்றும் பால்குடம் எடுத்து வரப்பட்டது. முற்பகல் 11 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு திருமஞ்சன குடம் எடுத்து வரப்பட்டது. நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையைத் தொடர்ந்து அம்பாள் வீதியுலா நடைபெற்றது. புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு அம்பாள் சேர்க்கைக்கு பின்னர், படைப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு அம்பாள் மஞ்சள் நீராடி வீதியுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை முக்காணி கிராம சேனைத் தலைவர் சமுதாயம் மற்றும் வீரபாகு சேனைத் தலைவர் இளைஞரணியினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com