Enable Javscript for better performance
இலவசமாக பண்ணைக் குட்டைகள்அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    இலவசமாக பண்ணைக் குட்டைகள்அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 13th July 2019 07:57 AM  |   அ+அ அ-   |    |  

    தூத்துக்குடி மாவட்டத்தில் இலவசமாக பண்ணைக் குட்டைகள் அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 2018-19 நிதியாண்டில் 139 பண்ணைக் குட்டைகள் ரூ.1.34 கோடி மதிப்பில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக அமைக்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் ரூ. 1 லட்சம் மதிப்பில் 515 பண்ணைக் குட்டைகள் ரூ.5.15 கோடி மதிப்பில் 100 சதவீத மானியத்தில் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 2 மீட்டர் ஆழம் கொண்ட ஒரு பண்ணைக் குட்டையில் 1800 கன மீட்டர் மழை நீரை சேமிக்க இயலும். 
    இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நிலத்தின் வரைபடம், கணினி பட்டா, முகவரி, புகைப்படம் ஆகிய விவரங்களுடன் தங்கள் வட்டாரத்துக்குள்பட்ட வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.
    விளாத்திகுளம், புதூர், கோவில்பட்டி, கயத்தாறு மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டார விவசாயிகள், கோவில்பட்டி கனரா வங்கி பின்புறம் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலக உதவி செயற்பொறியாளரை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 04632 234280, 9442049591 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
    தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் வட்டார விவசாயிகள் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி வடக்கு பகுதியில் ஆறுமுகச்சாமி காலனியில் அமைந்துள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலக உதவி செயற்பொறியாளரை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 0461 2347280 என்ற தொலைபேசி எண்ணிலும்,  9443694245 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
    திருச்செந்தூர், சாத்தான்கும், உடன்குடி மற்றும் ஆழ்வார்திருநகரி வட்டார விவசாயிகள் திருச்செந்தூர் முத்துமாலை அம்மன் கோயில் தெருவில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை அணுகலாம். 
    மேலும் விவரங்களுக்கு 04639 245280 என்ற தொலைபேசி எண்ணிலும், 9443157710 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp