ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணி
By DIN | Published On : 13th July 2019 07:57 AM | Last Updated : 13th July 2019 07:57 AM | அ+அ அ- |

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய் காந்திஜி மகளிர் மன்றம், மாவட்ட நேரு இளையோர் மையம் இணைந்து, பாரத பிரதமரின் தூய்மைப் பாரத இயக்கத்தின்கீழ் தூய்மைப்படுத்தும் பணியில் 50 மணி நேரம் ஈடுபட முடிவு செய்து இப்பணியை கடந்த ஜூன் 17ஆம் தேதி தொடங்கினர். தொடர்ந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியை ஒன்றிய ஆணையர் கிரி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், மகளிர் மன்றத் தலைவி அமுதா உள்பட பலர் கலந்துகொண்டனர்.