சுடச்சுட

  

  ஜூலை 16இல் சந்திர கிரகணம்: திருச்செந்தூர் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்

  By DIN  |   Published on : 13th July 2019 10:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை  16) பூஜை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  இதுகுறித்து கோயில் இணை ஆணையர் சி.குமரதுரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டு வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நள்ளிரவுக்கு பின் 1.37 மணி முதல் புதன்கிழமை அதிகாலை 4.29 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. இதையொட்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு பள்ளியறை பூஜைகளாகி, நடைசாத்தப்பட்டு, மறுபடி திறக்கப்பட்டு விஸ்வரூப பூஜையாகி சுவாமிக்கு பட்டு சாத்தி வைக்கப்படும்.
   பின்னர் புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடைபெறும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai