முத்தாலங்குறிச்சி குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்
By DIN | Published On : 13th July 2019 07:58 AM | Last Updated : 13th July 2019 07:58 AM | அ+அ அ- |

செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி குளத்தில் சீரமைப்புப் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
"ஊருக்கு நூறு கை' திட்டத்தின் கீழ் முத்தாலங்குறிச்சி குளத்தை சீரமைத்து தூர்வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, திட்டத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்து தொடங்கிவைத்தார். சார்- ஆட்சியர் சிம்ரன் சித்சிங் கலோன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமா சங்கர், வட்டாட்சியர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது ஆட்சியர் பேசியது: தற்போது குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி, மேடு பள்ளங்கள் சரி செய்யப்படும். குளம் தூர்வாரப்பட்டு செம்மைப்படுத்தப்படும். குளத்து மண் வெளியேற்றப்படாது. தூர்வாரும் பணியில் பொதுப்பணித் துறை பங்களிப்பும், உள்ளூர் பிரமுகர்கள் பங்களிப்பும் உண்டு என்றார் அவர்.
நிகழ்ச்சியில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுப்புலெட்சுமி, செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ஆறுமுக சேகர், வருவாய் ஆய்வாளர் அய்யனார், கிராம நிர்வாக அலுவலர் கந்தசிவசுப்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.