சுடச்சுட

    

    இளையரசனேந்தல் அரசுப் பள்ளியில்150 மாணவர்களுக்கு மடிக்கணினி

    By DIN  |   Published on : 14th July 2019 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 150 மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
    விழாவுக்கு, பள்ளி பெற்றோர், ஆசிரியர் கழகத் தலைவர் சூரப்பாஅப்பாசாமி தலைமை வகித்தார். குருவிகுளம் நிலவள வங்கித் தலைவரும், அதிமுக ஒன்றியச் செயலருமான ஆர்.வாசுதேவன் 150 மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினியை வழங்கி பேசினார். 
    விழாவில், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் வீ.காளிராஜ், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலர் எஸ்.காளிராஜ், அதிமுக நிர்வாகிகள் செல்வம், காளிராஜன், அய்யாத்துரை, காளிமுத்து, பசுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
    பள்ளித் தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார். ஆசிரியர் கருப்பசாமி நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai