சுடச்சுட

  


  கர்நாடகம், கோவா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சி மாற்றத்துக்கு பாரதிய ஜனதா கட்சி முயற்சி மேற்கொள்வதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர்கள் தங்கராஜ், சேகர், செந்தூர்பாண்டியன், ஐசன் சில்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  மாநில துணைத் தலைவர் ஏபிசிவீ சண்முகம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எஸ். டேனியல்ராஜ், வர்த்தக காங்கிரஸ் பிரிவு மாவட்டத் தலைவர் டேவிட் பிரபாகரன், மகளிர் காங்கிரஸ் மாவட்டத் தலைவி முத்துவிஜயா, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்டத் தலைவர் பிராங்கிளின் ஜோஸ்,  நிர்வாகிகள் பிரபாகர், காங்கிரஸ் எடிசன், முத்துமணி, சாமுவேல் ஞானதுரை, கோபால், பிரபாகர், ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai