சுடச்சுட

  


  புளியம்பட்டி அருகே வீட்டின் கதவுகளை உடைத்து நகைகளை திருடிய 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
  புளியம்பட்டி அடுத்துள்ள மருதன்வாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் வி.வேலம்மாள் (48). இவர், வியாழக்கிழமை வெளியூருக்குச் சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பி வந்தபோது, வீடு திறந்து கிடந்ததாம். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த தங்கச் சங்கிலி, கம்மல் உள்ளிட்ட 4 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் திருடு போயிருந்தது தெரிய வந்ததாம்.
  இதுகுறித்த புகாரின்பேரில் புளியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, நகை திருட்டில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த செந்தூர்முருகன் (45), செல்லதுரை (43), பழனிசாமி (42) ஆகியோரை கைது செய்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai