சுடச்சுட

  

  பிராணிகள் வதை தடுப்புச் சங்க உறுப்பினராக சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

  By DIN  |   Published on : 14th July 2019 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தூத்துக்குடி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்க உறுப்பினராக சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம் 2001இன் படியும்,  உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படியும் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்துக்கு உறுப்பினராக சேர, கால்நடைகள் மீது விருப்பம் கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
  உறுப்பினர்கள் விண்ணப்பத்தில் அவர்களது சுயகுறிப்புரையுடன், சங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்படுவேன் என உறுதிமொழி அளித்தல் வேண்டும். உறுப்பினர்கள் எந்தவித அரசியல் கட்சி செயல்பாட்டிலோ, குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது. சங்க உறுப்பினர்களுக்கு ஊதியமோ அல்லது மதிப்பூதியமோ வழங்கப்பட மாட்டாது. சேர்க்கை கட்டணம் ரூ.100, ஆண்டு கட்டணம் ரூ.200 ஆகும். விண்ணப்பங்களை ஜூலை 31ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர், கால்நடை பராமரிப்புத் துறை, புதுக்கிராமம், தூத்துக்குடி-3 என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2322802 என்ற தொலைபேசி எண்ணிலும், ஹக்ஹட்ற்ன்ற்ண்ஸ்ரீர்ழ்ண்ய்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai