சுடச்சுட

  


  சாத்தான்குளம் அருகே  முதலூரில் நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. 
  சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் முதலூர் தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்பேரணி, பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கியது. பேரணியை ஒன்றிய ஆணையர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) செல்வி முன்னிலை வகித்தார்.பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியில் வந்து நிறைவடைந்தது. 
  இதில், ஆசிரியர்கள் செல்வராஜ்,  வசந்தி, ஷீபா, உடற்கல்வி ஆசிரியர் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளித் தலைமை ஆசிரியர் லிவிங்ஸ்டன் நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai