சுடச்சுட

  


  கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில் கணியான் கூத்து கலைஞர் சனிக்கிழமை உயிரிழந்தார். 
  தூத்துக்குடி  மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (32) .  கணியான் கூத்து கலைஞர். இவர், நாகர்கோவில் அருகேயுள்ள ஒரு கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக  குழுவினருடன் வந்தாராம்.  நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, சனிக்கிழமை  காலை நாகர்கோவிலில் இருந்து சொந்த ஊரான ஸ்ரீவைகுண்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தாராம். இவருடன், மற்றொரு கணியான் கூத்து கலைஞரான திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (30)  என்பவரும் சென்றாராம். மோட்டார் சைக்கிளை முத்துப்பாண்டி ஓட்டினார். இருவரும் தோவாளை பகுதியில் வந்துகொண்டிருந்த போது, சென்னையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த தனியார் ஆம்னி  பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
  விபத்தில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டியை போலீஸார் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கரின் சடலத்தை மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்கு  அனுப்பினர். 
  இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இறந்த சங்கருக்கு  மனைவி,  2 குழந்தைகள் உள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai