திருச்செந்தூர் நகர கூட்டுறவு வங்கி நூற்றாண்டு விழாவில் 623 பயனாளிகளுக்கு ரூ. 5.70 கோடி கடனுதவி

திருச்செந்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நகர கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழாவில், 623 பயனாளிகளுக்கு ரூ. 5.70 கோடி கடனுதவியை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, கடம்பூர் செ. ராஜு ஆகியோர் வழங்கினர்.


திருச்செந்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற நகர கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு விழாவில், 623 பயனாளிகளுக்கு ரூ. 5.70 கோடி கடனுதவியை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, கடம்பூர் செ. ராஜு ஆகியோர் வழங்கினர்.
திருச்செந்தூர் நகர கூட்டுறவு வங்கி கடந்த 1919-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். வங்கித் தலைவர் ப.தா. கோட்டை மணிகண்டன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு. கோவிந்தராஜ், இணைப் பதிவாளர் க.பா. அருளரசு, வங்கி துணைத் தலைவர் ந. ஜாண்எக்ஸ்டர்லோபோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு, நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, டாம்கோ, டாப்செட்கோ, மகளிர் சுய உதவிக்குழு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் வணிகர்கள் என 623 பயனாளிகளுக்கு ரூ. 5.70 கோடி கடனுதவிகளையும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வங்கியின் பொதுநல நிதியிலிருந்து பயனாளிகளுக்கு ரூ. 57,800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.
முன்னதாக, விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு பேசியது:
திருச்செந்தூர் கூட்டுறவு நகர வங்கி 100 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 1919-ஆம் ஆண்டு 36 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இந்த வங்கி, இன்று 14,004 உறுப்பினர்களுடன் வளர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 8 நகர கூட்டுறவு வங்கிகளில், திருச்செந்தூர் வங்கி சிறப்பாக செயல்படுகிறது. 
கூட்டுறவு வங்கிகளின் வளர்ச்சிக்கு வைப்புத்தொகை முக்கியம். எனவே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு வங்கிகளின் வைப்புத்தொகைக்கு வட்டியை 14 சதவீதமாக உயர்த்தியுள்ளார்.
தற்போது 4,450 கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. 2011 இல் ரூ. 26 ஆயிரம் கோடியாக இருந்த வைப்புத்தொகை, இன்று ரூ. 52 ஆயிரம் கோடியாக இருமடங்கு உயர்ந்துள்ளது என்றார் அவர்.
விழாவில், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தி. தனப்ரியா, காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆ. பாரத், தமிழ்நாடு நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பனைபொருள் கூட்டுறவு இணையம் தலைவர் த. தாமோதரன், அதிமுக முன்னாள் தொகுதி செயலர் எஸ். வடமலைப்பாண்டியன், மாவட்ட பொருளாளர் மு. ஜெபமாலை, ஒன்றியச் செயலர் மு. ராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் மு. சுரேஷ்பாபு, நகரச் செயலர் வி.எம். மகேந்திரன், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் செல்வ சண்முகசுந்தர், விஜயராகவன், பூந்தோட்டம் பி. மனோகரன், வங்கி நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சி. கணேசன், மு. கணேசன், செ. பெனடிக், வெ. சங்கரகிருஷ்ணன், பொ. வேல்குமார், சு. ஆனந்தவல்லி, ம. முத்துக்குமார், சி. கஸ்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை மாவட்ட செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் தொகுத்து வழங்கினார். வங்கியின் மேலாண்மை இயக்குநர் கோ. சந்திரா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வங்கிப் பொது மேலாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com